திங்கள், 8 டிசம்பர், 2014

அஷ்டாங்க யோகம்


பிணி, திரை, மூப்பு இல்லாத
வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட
நெடுங்காலமாக மனித குலத்தின்
ஆசையாக உள்ளது. அதற்கான
வழிமுறைகளைத் தேடும்
முயற்சிகளும் காலங் காலமாக
நடைபெற்று வருகின்றன. நவீன
மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான
விடையை முனைந்து தேடி வருகிறது;
இதுவரையில்
வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால் நமது முன்னோர்கள்
இதற்கான வழிமுறைகளைப்
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர்.
யோகாசனம், பிராணாயாமம்,
முத்திரைகள் என நம் முன்னோர்கள்
வகுத்து வைத்த வழிமுறைகள்
அனைத்துமே மூப்பு, திரை,
பிணி என அனைத்
தையுமே வெற்றி கொள்ளும்
மார்க்கங்களாகும்.
திருமந்திரத்தின் மூன்றாம்
தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க
முழுக்க "அஷ்டாங்க யோகம்'
என்பதைக்
குறித்தே விவரிக்கிறது. பல
சூட்சும
ரகசியங்களை விளக்குகிறது.
"அஷ்டாங்கம்' என்ற வடமொழிச்
சொல்லுக்கு "எட்டு பிரிவுகள்'
என்பது பொருள். முழுமையான
யோகக்
கலையானது எட்டு அம்சங்களைத்
தன்னுள் கொண்டுள்ளது.

அவை முறையே-
1. இயமம்
2. நியமம்
3. ஆசனங்கள்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி

இந்த ஒவ்வொன்றையும்
குறித்து மிக விரிவாக
திருமூலர்
தனது திருமந்திரத்தில்
விளக்கியுள்ளார்.
அவை அனைத்தையும் விவரிக்க
வேண்டுமென் றால் பல பாகங்கள்
கொண்ட ஒரு தனிப்
புத்தகமே எழுத
வேண்டியதிருக்கும்.
தற்போது "பிராணாயாமம்' எனும்
மூச்சுப்
பயிற்சி குறித்து திருமூலர்
கூறியுள்ள சில
உண்மைகளையும், சூட்சும
ரகசியங்களையும் மட்டும்
காணலாம்.
உயிருக்கு ஆதாரமாக
இருப்பது மூச்சுதான்.

எனவேதான் அதை "உயிர் மூச்சு'
என்கிறோம். மனிதன் உணவின்றி பல
நாட்கள் உயிர் வாழ முடியும். நீர்
இல்லாமற்கூட சில நாட்கள் உயிர்
வாழலாம். ஆனால்
காற்று (பிராணவாயு) இல்லாமல்
போனால் எட்டு நிமிடங்களில்
மரணம் நிச்சயம்! உடலின் இயக்கங்கள்
அனைத்திற்கும் இந்த மூச்சுக்
காற்றே ஆதாரம்.

"ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த்
தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும்
குதிரைமற்று
ஒன்றுண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும்
கொடாது போய்ப்
பொய்யரைத்
துள்ளி விழுந்திடும் தானே.'
(திருமந்திரம்)

நாம்
நமது ஐம்பொறிகளாலேயே இந்த
உலகை அளக்கிறோம்.
ஐம்பொறிகளின் வழியாகக்
கிடைக்கும் செய்திகளின்,
உணர்வு களின்
அடிப்படையிலேயே நமது செயல்பாடு களும்
அமைகின்றன. கண், காது, மூக்கு,
வாய், மெய் (தோல்) ஆகிய இந்த
ஐம்பொறிகளையே திருமூலர்

"ஐவர்' என்று குறிக்கிறார்.
இந்த ஐவர்க்கும் நாயகனாகவும், இந்த
ஐம்பொறிகளும் உறையும்
ஊருக்குத் (உடலுக்கு)
தலைவனாகவும் ஒருவன்
இருக்கிறானாம். நமது மனம்தான்
(அல்லது சித்தம்) இந்தத் தலைவன்!
தலைவன் வலுவாக இருந்தால்
ஐம்பொறிகளும், இந்தப்
பருவுடலும்
அவனுக்கு அடங்கி நடக்கும்.
தலைவன் வலுவற்றவனாக
இருக்கும் பட்சத்தில்
ஐம்பொறிகளும் தம் இச்சைக்குச்
செயல்படத் துவங்கிவிடும்.
உடலும் (ஊரும்) அந்தத் தலைவனின்
கட்டுப்பாட்டிற்குள் இராது.

இந்த மனம் எனும் தலைவன்
ஏறி வரும்
குதிரை ஒன்று உள்ளதாம். சித்தர்
இலக்கியங்க ளில் பல சங்கேத
மொழிகள் உபயோகத்தில் உள்ளன.
அவற்றுள் இந்த "குதிரை' என்பதும்
ஒன்று. வேகம், உறுதி,
இடைவிடாத ஓட்டம்
ஆகியவை குதிரையின்
தனிக்குணங்களாகும். குதிரைகள்
தூங்கும்போதுகூட
நின்று கொண்டேதான் தூங்கும்;
படுப்பதில்லை.
நோய்வாய்ப்படும்போது மட்டுமே குதிரைகள்
படுத்துக்கொள்ளும். இந்த
குணநலன்கள்
அனைத்துமே நமது மூச்சுக்
காற்றுக்கும் (பிராணன்)
பொருந்துகின்றன. எனவேதான்
சித்தர் இலக்கியங்களில் பல
இடங்களில்
மூச்சு அல்லது பிராணனைக்
குறிக்க "குதிரை' என்ற சங்கேதச்
(ரகசியம்) சொல்லை உபயோகப்
படுத்துகின்றனர்.
குதிரை அடிப்படையில்
ஒரு காட்டு விலங்கு. எளிதில்
கட்டுப்படாது.

ஒரு குதிரையைக் கட்டுக்குள்
கொண்டு வருவது என்பது மிகவும்
கடினமான ஒரு காரியம். அதில்
தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் பல
நாட்கள் போராடித்தான்
குதிரையை அடக்கி அதன் மேல்
ஏறி சவாரி செய்ய முடியும்.
ஒவ்வொரு முறையும் அதன் மேல்
ஏற முயற்சி செய்யும்போதும்
அது குப்புறத் தள்ளிவிடும்.
படிப்படியாகவே அதை அடக்க
முடியும்.

ஒருமுறை அதை அடக்கி வெற்றி கொண்டு சேணத்தைப்
பூட்டிவிட்டால், தனது வாழ்நாள்
முழுவதும் அந்தக்
குதிரை தனது எஜமானனுக்கு விசுவாசமுள்ள
துணையாக இருக்கும். மூச்சுக்
காற்றும் அவ்வாறே! அடக்குவதும்
ஆள்வதும் மிக மிகச் சிரமமான
காரியம். இந்த மூச்சு எனும்
குதிரை யாருக்கு அடங்கும்?
இறைவனின்
திருவடிகளையே பற்றிக்
கொண்டு மெய்ஞ்ஞான வழியில்
செல்லும்
மனிதர்களுக்கே (மெய்யர்க்கு) இந்த
குதிரை வசப்படுமாம்! உலக
மாயைகளில் சிக்கி, இறை நாட்டம்
கொள்ளாது வாழும்
பொய்யர்களை இந்த சண்டிக்
குதிரை கீழே தள்ளிவிடுமாம்.
இந்த ஒரு பாடலில் திருமூலர் பல
சூட்சுமமான
விஷயங்களை விளக்கியிருக்கிறார்.
அவற்றை சுருக்கமாகக் காண்போம்.

* ஐம்பொறிகளையும் ஆளும்
தலைவன்- சித்தம் (மனம்).

* இந்த மனம்
ஒருநிலைப்பட்டு உறுதியா னால்
மட்டுமே ஐம்புலன்களும்,
பருவுடலும் அந்த சித்தத்தின்
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
இதுவரையில் படைப்பின்
சூட்சுமங்களை யும்
கரு உருவாவதில் இருக்கும்
ரகசியங்களையும்
குறித்து திருமூலரின் சில
கருத்துகளைக் கண்டோம்.
இனி வேறு சில சூட்சும ரகசியங்
களைக் காணலாம்.
பிணி, திரை, மூப்பு இல்லாத
வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட
நெடுங்காலமாக மனித குலத்தின்
ஆசையாக உள்ளது. அதற்கான
வழிமுறைகளைத் தேடும்
முயற்சிகளும் காலங் காலமாக
நடைபெற்று வருகின்றன. நவீன
மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான
விடையை முனைந்து தேடி வருகிறது;
இதுவரையில்
வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால் நமது முன்னோர்கள்
இதற்கான வழிமுறைகளைப்
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர்.
யோகாசனம், பிராணாயாமம்,
முத்திரைகள் என நம் முன்னோர்கள்
வகுத்து வைத்த வழிமுறைகள்
அனைத்துமே மூப்பு, திரை,
பிணி என அனைத்
தையுமே வெற்றி கொள்ளும்
மார்க்கங்களாகும்.

திருமந்திரத்தின் மூன்றாம்
தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க
முழுக்க "அஷ்டாங்க யோகம்'
என்பதைக்
குறித்தே விவரிக்கிறது. பல
சூட்சும
ரகசியங்களை விளக்குகிறது.

"அஷ்டாங்கம்' என்ற வடமொழிச்
சொல்லுக்கு "எட்டு பிரிவுகள்'
என்பது பொருள். முழுமையான
யோகக்
கலையானது எட்டு அம்சங்களைத்
தன்னுள் கொண்டுள்ளது.

அவை முறையே-
1. இயமம்
2. நியமம்
3. ஆசனங்கள்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி

இந்த ஒவ்வொன்றையும்
குறித்து மிக விரிவாக
திருமூலர்
தனது திருமந்திரத்தில்
விளக்கியுள்ளார்.
அவை அனைத்தையும் விவரிக்க
வேண்டுமென் றால் பல பாகங்கள்
கொண்ட ஒரு தனிப்
புத்தகமே எழுத
வேண்டியதிருக்கும்.

தற்போது "பிராணாயாமம்' எனும்
மூச்சுப்
பயிற்சி குறித்து திருமூலர்
கூறியுள்ள சில
உண்மைகளையும், சூட்சும
ரகசியங்களையும் மட்டும்
காணலாம்.
உயிருக்கு ஆதாரமாக
இருப்பது மூச்சுதான்.
எனவேதான் அதை "உயிர் மூச்சு'
என்கிறோம். மனிதன் உணவின்றி பல
நாட்கள் உயிர் வாழ முடியும். நீர்
இல்லாமற்கூட சில நாட்கள் உயிர்
வாழலாம். ஆனால்
காற்று (பிராணவாயு) இல்லாமல்
போனால் எட்டு நிமிடங்களில் ப்
மனதை இயக்குவது மூச்சுக்
காற்று (பிராணன்).

*இந்த மூச்சுக்
காற்றை வசப்படுத்து பவர்களுக்கு மட்டுமே மனம்
ஒருமுகப்படும்.

* இறைவனைப் பற்றிக்
கொண்டு மெய்ஞ் ஞான வழியில்
செல்பவர்களுக்கு மட்டுமே மூச்சு கட்டுப்படும்.

* பொய்ஞானம் எனும் மாயைகளில்
சிக்குண்டு உழலுபவர்களுக்கு மூச்சு,
மனம், ஐம்பொறிகள், பருவுடல்
ஆகிய எதுவுமே வசப்படாது.
முக்தி நிலையும்

இவர்களுக்கு சாத்தியப்படாது.
குருவின் துணை
நாம் பிறந்தது முதல்
இறப்பது வரையில்
ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒன்றைப் புதிதாகக்
கற்றுக்கொள்கிறோம். பல
விஷயங்களைப் பிறர் சொல்லிக்
கொடுக்கக் கற்றுக்கொள்கிறோம்.
சிலவற்றை பிறரைப் பார்த்துக்
கற்றுக்கொள்கி றோம். இவை தவிர
சிலவற்றை இயற்கையை உற்று நோக்கியும்கூட
கற்றுக்கொள்கிறோம். புதிதாக
ஒன்றைக் கற்றுத்தரும்
ஒவ்வொருவருமே நமக்கு ஒரு குருதான்!

கல்விக்கு குருவின் துணை மிக
அவசியம். அதைவிடவும் ஞானத்
தேடலில்- ஞானம் தேடிய
பயணத்தில் ஒரு குரு மிக மிக
அவசியம். பிராணா யாமம் எனும்
மூச்சுப் பயிற்சியை முறையாகக்
கற்றுக்கொள்ள
ஒரு குரு கட்டாயமாகத் தேவை.
இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல்
வலியுறுத்துகிறது.

"ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார்
இல்லை
கூரிய நாதன் குருவின் அருள்
பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'
(திருமந்திரம்)

"மனம்' என்பதை "ஆரியன்' என்ற
சொல்லால் திருமூலர்
குறிப்பிடுகிறார். இந்த
மனமானது மிக நல்லதாம். இந்த
மனதிடம் இரண்டு குதிரைகள்
உள்ளதாம். முதல் பாடலில்
ஒரு குதிரை உண்டு எனக் கூறிய
திருமூலர் அடுத்த
பாடலிலேயே இரண்டு குதிரைகள்
உள்ளதாகக் கூறுகிறாரே,
இது என்ன முரண்பாடு என்ற
கேள்வி எழுகிற தல்லவா?
இங்கேதான் மூச்சு குறித்த
அடுத்த சூட்சும ரகசியம்
பொதிந்து கிடக்கிறது.

முதல் பாடலில் "குதிரை'
என்பது மூச்சு அல்லது பிராணனைக்
குறிக்கிறது. இந்தப் பாடலில்
அது நமது இடது நாசி,
வலது நாசி ஆகிய இரண்டையும்
குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம்.
இதுவே இரண்டு குதிரைகள்.
அல்லது இடது நாசி வழியாகச்
செல்லும் மூச்சுக்
காற்றை ஒரு குதிரை எனவும்,
வலது நாசி வழியாகச் செல்லும்
மூச்சுக்
காற்றை மற்றொரு குதிரை எனவும்
பொருள் கொள்ளலாம்.

பிராணன் என்பது ஒன்றுதானே?
வலது நாசியில் செல்லும்
மூச்சுக்கும், இடது நாசியில்
செல்லும் மூச்சுக்கும்
வித்தியாசம் இருக்க
முடியுமா என்ற கேள்வி உங்கள்
மனதில்
இப்போது எழுந்திருக்கும். ஆம்;
இரண்டு நாசிகளிலும் செல்லும்
மூச்சுக் காற்றுக்கு தனித்தனித்
தன்மைகளும், செயல்பாடுகளும்
உள்ளன. எனவேதான் திருமூலர்
அதைப் பாகுபடுத்திக் காட்ட
இரண்டு குதிரைகள் என்றார்.
நாம் நமது இரண்டு நாசித்
துவாரங்களின் வழியாகவும்
ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக
ஒரு தவறான
கருத்து நம்மிடையே உள்ளது.
உங்களது சுவாசத்தை உற்றுக்
கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள
உண்மை புரியும்.

ஒரு நேரத்தில் ஒரு நாசியின்
வழியாகவே அதிகப்படியான
காற்று உள்ளே செல்லும். (அடுத்த
நாசியில் மிகச் சிறய அளவிலான
காற்று உட்புகும்.)
சற்று நேரத்திற்குப்பின்
(இரண்டு மணி நேரத்திற்குப் பின்)
அடுத்த நாசி வழியாக
காற்று செல்லத் துவங்கும்.
இவ்வாறு ஒரு நாளில்
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என
மொத்தம் 12 முறை இந்த இடம்
மாறுதல் நடைபெறும். எந்த
நேரத்தில் எந்த நாசியில்
காற்று செல்லும் என்பதையும் நம்
முன்னோர் கள்
கணித்து வைத்துள்ளனர்.

நேரம் நாசி

காலை 6-8
மணி வரை வலது நாசி.

காலை 8-10
மணி வரை இடது நாசி.

காலை 10-12
மணி வரை வலது நாசி.

மதியம் 12-2
மணி வரை இடது நாசி.

மதியம் 2-4 மணி வரை வலது நாசி.

மாலை 4-6
மணி வரை இடது நாசி.

மாலை 6-8
மணி வரை வலது நாசி.

இரவு 8-10 மணி வரை இடது நாசி.

இரவு 10-12
மணி வரை வலது நாசி.

இரவு 12-2 மணி வரை இடது நாசி.

இரவு 2-4 மணி வரை வலது நாசி.

அதிகாலை 4-6
மணி வரை இடது நாசி.

வலது நாசியின் வழியாக
உள்ளே செல்லும்
காற்றிற்கு சூரிய கலை என்றும்;
இடது நாசியின் வழியாக
உள்ளே செல்லும்
காற்றிற்கு சந்திர கலை என்றும்
நமது முன்னோர்கள் பெயர்
சூட்டியுள்ளனர். இந்த
இரண்டு சுவாசங்களுக் கும்
தனித்தனிப் பண்புகளும்
வெவ்வேறு வகையான
செயல்பாடுகளும் உள்ளன.
வலது நாசிக் காற்று (சூரிய கலை)

* உடலுக்குத் தேவையான வெப்ப
சக்தியைத் தருகின்ற பிராணன்
இதுவே.

* வலது நாசியின் வழியாக
சுவாசம் நடைபெறும்
காலகட்டத்தில் உடலின் வெப்ப
நிலை சற்றே உயரும்.

* உடல் சுறுசுறுப்படையும்;
சோர்வு அகலும்.

* உடலின் வலிமை அதிகரிக்கும்.
* மூளையும் உடலும் பரபரப்பாக
இயங்கும்.

* இந்த இரண்டு மணி நேரத்தில்
நிதானம் குறைவாகவும், வேகம்
அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)
* உடலைக் குளிர்விக்கும்
தன்மை கொண்டது.

* சந்திரனைப் போன்றே இந்த
மூச்சுக் காற்றும்
குளுமையானதாகும்.

* இடது நாசி வழியே சுவாசம்
நடைபெறும் வேளையில் உடலின்
வெப்ப நிலை சற்றே குறைந்து,
உடல் குளிர்ச்சியடையும்.

* பரபரப்புத் தன்மை குறைந்து,
மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத்
தன்மை உருவாகும்.

* மூளை அமைதியாக சிந்திக்கத்
துவங்கும்.

* அவசரத் தன்மை மறைந்து,
நிதானமான மனநிலை நிலவும்.
இந்த இரண்டு வகையான
மூச்சுகளையும்
(குதிரைகளையும்) அடக்கி ஆளக்
கற்றுக் கொண்டால், மனம்,
ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய
அனைத்துமே நம்
கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால்
இவற்றை அடக்கும் சூட்சுமம்
எவருக்கும்
தெரிவதில்லை என்பதையே இந்தப்
பாடலின்
இரண்டாவது வரி தெரிவிக்கிறது.

"வீசிப்பிடிக்கும் விரகு (உபாயம்,
வழிமுறை) அறிவார் இல்லை.'
இந்த சூட்சுமங்களைக்
கற்றுக்கொண்டு, பிராணன் எனும்
குதிரைகளை வசப்படுத்த
ஒரு குருவின்
துணை வேண்டும். அந்த
குருவும்
நுண்ணறிவு படைத்தவராக, அந்தக்
கலையில் முழுமை பெற்றவராக
இருத்தல் வேண்டும். இந்தக்
கருத்தே கடைசி இரு வரிகளில்
வெளிப் படுகிறது.

"கூரிய நாதன் குருவின் அருள்
பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'
இதில் "அருள் பெற்றால்' என்ற
சொற்களிலும் ஒரு சூட்சுமம்
உள்ளது. குருவிடம்
சென்று கற்றுக்கொள்வது வேறு;
அவரது அருளைப்
பெறுவதென்பது வேறு.
நீங்களே இதை ஆழமாகச்
சிந்தித்துப் பாருங்கள். இதிலுள்ள
சூட்சும ரகசியங்கள் புரியும்.

வியாழன், 27 நவம்பர், 2014

பிராணயாமம்


பிராணயாமம்
உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை பிராணயாமம் எனப்படும்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குத்
கூற்றை உதைக்குங் குரியது வாமே
-திருமூலர்
பொதுவாக யோகத்தில் மூன்று விதமான மூச்சுகள் கூறப்படுகின்றன
1. தோள்பட்டை சுவாசம்
2. மார்பு சுவாசம்
3. அடிவயிற்று சுவாசம்
நம் பிராணன் என்னும் உயிர்நிலை சக்தியினை வசப்படுத்தச் செய்யும் கலை இது. பிராணயாமத்தின் மூலம் தச வாயுக்களும் சீரடையும்.
பிராணயாமத்தின் நான்கு படிகள்
பூரகம்-மூச்சை உள்ளிழுத்தல்
கும்பகம்-மூச்சை உள் நிறுத்துதல்
ரேசகம்-மூச்சை வெளிவிடுதல்
சூன்யம்-மூச்சை வெளிவிட்ட பின் கும்பகத்தில் உள்நிறுத்துதல்
பிராணயாமத்தின் பலன்கள்
மனஅழுத்தம் நீங்குகிறது. உடல் அசதி மற்றம் மன சோர்வு நீங்கி சுறுசுறுப்பு மேலோங்குகிறது. உளவியல்ரீதியான பாதிப்பின்றும் 75% விழுக்காட்டிற்கு மேலாக முன்னேற்றம் ஏற்படும். ரத்தஓட்டம் சீரடையும். நரம்பு மண்டலம் வலிமை பெறும். மூளையில் ரத்தஓட்டம் மிகுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் நம் உடலைவிட்டு முழுவதும் நீங்கும். நம் உடலை, மனதை ஆரோக்கியமாகவும், முறையே வலிமையாகவும், வளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும். அளவுக்கதிகமான உடல் கொழுப்பைக் கரைத்து விடும். ஆயுள் அதிகரிக்கும். நினைவாற்றல் மிக மிக அதிகரிக்கும். நம் வயிறு, கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல்களை வலிமையாக்கி சீரண மண்டலத்தைச் சீராக்கும். குரல் வளம் மிகும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். அலைபாயும் மனது ஒடுங்கி தன்னம்பிக்கை மிகும்.
உள்ளொளி பெருகும். (ஆன்மிக உணர்வு) மேலோங்கி மனஆற்றல் சிறக்கும்.
சுத்தமான, காற்றோட்டமுள்ள இடத்தில் பயிற்சி செய்ய வேண்டும். தனிமையில் அமைதியாக பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஓசோன் பரப்பினின்றும் (உயிர்க்காற்று) மிகுந்திருக்கும் வேளையில் செய்வது மிக நல்லது. வெறும் வயிற்றில் அல்லது அரை கப் சுத்தமான நீரை அருந்திப் பின் செய்ய வேண்டும். பத்மாசனம், சித்தாசனம், சுகாசனம் அல்லது வஜ்ராசனம் போன்ற அமர்ந்த நிலை ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் யோகம், பிராணயாமம் செய்வதே நல்லது. இரவு விழித்திருந்தாலோ, களைப்பாக இருந்தாலோ பிராணயாமம் செய்யக்கூடாது. நம்முடைய ரத்த நாளங்கள் சுத்திகரிக்கப்பட்ட பின்பே பிராணயாமம் செய்ய வேண்டும். எனவே ஆசனம் செய்து ரத்த நாளங்களைச் சுத்திகரித்து விட்டுப் பின் பிராணயாமம் செய்வது நன்று.
எச்சரிக்கை : பயிற்சியாளரின் உதவியின்றி எந்த பிராணயாமப் பயிற்சிகளும் செய்யக்கூடாது. இதய நோயாளிகள் கும்பக நிலையில் மூச்சை உள்நிறுத்துதல் மிக குறைந்த அளவே இருக்க வேண்டும். அல்லது நோயின் தன்மைக்கேற்ப கும்பகம் செய்யாமல் இருப்பது நல்லது. அதே போல ரேசகம் குறைந்த மாத்திரையில் செய்ய வேண்டும்.

வியாழன், 25 செப்டம்பர், 2014

தியான நன்மை !!!

தியானத்தால் ஏற்படும் நன்மைகள் !!!
1) அறிவுக் கூர்மை ஏற்படும்.
2) மன உறுதி உண்டாகும்.

3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.
4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.
5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.
6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.
7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.
8) முகம் பிரகாசமடையும்.
9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.
10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.
11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.
12) தேவையற்ற கோபம் போகும்.
13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.
14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.
15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.
ஆதலினால் தியானிப்பீர்...!
‪#‎பிடிச்சா‬ லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

வெள்ளி, 2 மே, 2014

ஜோதிட பழமொழிகள்

ஜோதிட பழமொழிகள் :
1. பத்தில் குரு பதவிக்கு இடர்
2. இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
3. பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
4. நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
5. சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
6. வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
7. கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
8. ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
10. குரு பார்க்க கோடி நன்மை
11.கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்
12.மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
13.பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
14.மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்
15.துலா கேது தொல்லை தீர்க்கும்
16.சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்
17.சுவாதி சுக்ரன் ஓயா மழை
18.மறைந்த புதன் நிறைந்த கல்வி
19.சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
20.சித்திரை அப்பன் தெருவிலே
21.பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்
22.விதி போகும் வழியே மதி போகும்.
23.அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
24.குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
25.சனி பார்த்த இடம் பாழ்
26.ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
27.எட்டில் சனி நீண்ட ஆயுள்
28.சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை
29.அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி
30.குரு நின்ற இடம் பாழ்
31.சனி பார்க்கும் இடம் பாழ்

thanks to kanagu thillai ram 002

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

achive everything

அனைத்தையும் அடையுங்கள் how to pray சாமி கும்பிடுவது எப்படி
ஏன் இலக்கை அடைவதற்கு நிம்மதியை தருவதற்கு பாரத்தை இறக்கி வைப்பதற்கு 
எவ்வாறு  இரண்டு கைகளையும் குவியுங்கள் ( கைகளில் சக்தி வெளிப்படும் தீபத்தில் இருந்து வெப்ப சக்தியை ஏற்றி உடலுக்குள் கொண்டு வாருங்கள் ) .தெய்வத்தின் முன் நிற்கும் போது அனைத்தையும் கேளுங்கள் . அங்கிருந்து உங்களுக்குள் ஒரு வெண்ணிற ஒளி உங்களுக்குள் வருவதாக கற்பனை செய்யுங்கள் . கோவிலுக்குள் இருக்கும் அனைத்து விக்ரகங்களிடமும் இருந்து அவ்வொளி வருவதாக கற்பனை செய்யுங்கள் . வெளியில் வரும் போது புத்துணர்ச்சியுடன் வருவீர்கள் . கல்லிடமே கேட்டு வாங்கக் கற்றுக் கொண்டால் அனைவரிடமும் கேட்கும் வாங்கும் திறன் அதிகரிக்கும் . 
மனோ தத்துவம்  ஒரு குறிக்கோளை 20 நிமிடம் 48 நாட்கள் நினைத்துக் கொண்டு இருந்தால் அது நடக்கும் .
வரலாறு முற்காலங்களில் கோவில்கள் ஊரை நிர்வகிக்கவும் இடி மின்னல்களில் இருந்து பாதுகாக்கவும் நாம் வாழ்ந்த வீடுகளை விட கோட்டை கொத்தளங்களுடன் தீயவைகள் எதையும் அண்ட விடாமல் பாதுகாப்புடன் அமைக்கப் பட்டுள்ளன .
பழமொழிகள் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் .
கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்   
ஆகம விதிகள்  
அறிவியல் இறை குறியீடுகளை அராய்ச்சி செய்து மனிதனையும் தெய்வமாக்கும்  REIKY symbol களான நாமம் , வேல் , களை அடிப்படையாகக் கொண்டது . கோபுரங்கள் fengsui க்கு அடிப்படை 
உண்மைகள் திருவண்ணாமலை  தீபத்தன்று பனி ஆரம்பிக்கும் . சிவன் ராத்திரி அன்று விலகும் இன்று வரை நடந்துள்ளது .
முன்னோர்கள் உடற்பயிற்சிக்காக   சுற்றுகள் , சுத்தத்திற்கு ஊரணிகள் ,
தியானம் 
முடிவுரை 
எதிர்பார்ப்புகள் ஏன் வியாபார நிறுவனகள் பெரிதாகும் போது கிளைகளை அமைக்கும் போது திருப்பதி , சபரி மலை , பழனி கோவில்கள் தங்களது சொத்துக்களை dead investment ஆக்காமல்    உலகம் முழுதும் கிளைக் கோவில்களை அமைக்கக் கூடாது ? .முயற்சிகள் எடுப்போம் .
நல்லதே நடக்கட்டும் 
 

நன்றி

எங்களது creative team மூலமாக 12 தலைப்புகளில் தினமும் மக்களுக்கு உதவும் நோக்கில் ஒரு புதிய பதிவு வெளியிடப்படுகிறது .அது உங்களை நேரிடையாக வந்தடைய My Followers அல்லது Follow by Email எனும் இருபிரிவுகளில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் . நாங்கள் தருபவை நீங்களும் எங்கு தேடினாலும் கிடைக்காதது . தங்களை இணைத்துக் கொண்டதற்கு நன்றி .