தியானம்
மனம் எங்கிருக்கிறதோ அங்கேயே நிலை நிறுத்துவது தான் தியானம் .மனதிருந்தால் மார்க்கமுண்டு .தியானம் செய்தால் மனம் உறுதியாகும் , உடல் இலகுவாகும் , காற்றில் பறக்கும் .இதை அந்தகால மன்னர்கள் , அகத்தியர் , கடவுள்கள் என பலர் தவம் எனும் பெயரில் ஆண்டுக்கணக்கில் இருந்து பஞ்ச பூதங்களான காற்று , நீர் ,என அனைத்தையும் அடக்கி ஆண்டுள்ளார்கள் . நாம் அன்றாடம் வணங்கும் சிவனும் எப்போது தியான நிலையிலேயே உள்ளார் என்பதும் கவனித்தக்க ஒரு அம்சமாகும் .அந்த தியானம் நமக்கும் கை கூடுமா ?கூடும் .
செய்வதெப்படிகடினமான துணியை விரித்துக் கொண்டு வடக்குப்புறம் பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள் .முடிந்தால் பத்மாசனம் போட்டுக் கொள்ளுங்கள் .முடியாவிட்டால் சம்மணம் போடலாம் அதுவும் முடியாவிட்டால் Hypnotherapy முறைப்படி படுக்கையில் இரண்டு காலையும் கைகளையும் விரித்து கொண்டு படுத்துக் கொள்ளுங்கள் .தரையில் உங்கள் உடல் உறுப்புகள் எதுவும் பட வேண்டாம் . பேருந்தில் பயணிக்கும் போது கூட செய்யலாம் . கண்களை மூடிக்கொள்ளுங்கள் .
' ஓம் நமசிவய ' or 'அல்லா' or 'மாதாவே' எதாவது ஒரு மந்திரத்தை உச்சாடனம் செய்திடவும் . "ஓம் முருகா மற்றும் ஓம் சுப்ரமணியாய நமஹ " எனும் மந்திரங்கள் சக்தி வாய்ந்தது . புதிதாக செய்பவர்கள் இதை முயற்சிக்க வேண்டாம் ."ஓம்" எனும் பிரணவ மந்திரம் முருகனால் அப்பனுக்கு காதில் ஓதப்பட்ட மந்திரம் . மந்திரம் ஓதுவது போல் சத்தமாக சொல்லாமல் காதிற்குள் சொல்வது போல் மிக மிக மெதுவாக உச்சாடனம் செய்திடல் வேண்டும் . அப்போது தான் முக்காலம் இக்காலம் என அனைத்திற்கும் பறக்கும் கலையை ஒரே நாளில் அடைய முடியும் குறைந்தது 20 நிமிடம் இவ்வளவு தான் தியானம் . தினமும் செய்து பாருங்கள்.
3 மாதங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் கிடைக்கும் பலன்கள் உடல் இளைக்கும் , நினைத்ததை நடத்தலாம் , தன்னம்பிக்கை அதிகரிக்கும் , முகக் களை அதிகரிக்கும் . வியாதிகள் நீங்கும் .தொடர்ச்சியாக செய்து வரும்போது அடுத்தவர்களை நம் மேல் மயக்கம் கொள்ள வைக்கும் நம் சொல் பேசைக்க் கேட்க வைக்கும் ஹிப்னாடிசம் Hypnotism , நினைத்ததை நடத்த வைக்கும் மெஸ்மரிசம் Mesmerism .மருந்தில்லாமல் இயேசு பிரான் கைகளால் குணப்படுத்தும் முறையான ரெய்கி Reiky என அனைத்தும் கிடைக்கும் . இதுவும் தியானத்தால் கை கூடுவது தான் .
அறிவியல்
அறிவியல் ரீதியாக சொல்வதென்றால் மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...மனதின் அதிர்வெண்கள்
14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta இவ்வாறு அளவிடுகிறார்கள் .
அதிர்வெண்களை EEG(Electro Encephologram) மூலம் அறியலாம். நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை. 40 ஐ தாண்டினால் மரணம்; அகால மரணம்.
20 க்கு மேலே தாண்டினாலே உடல் நலம் பாதிக்கும் . இரத்தக் கொதிப்பு .
ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும் . இங்கே உடல்நலம் சரி யாகும் .
தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை; ஆழமான அமைதி.
டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.
ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...
அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....
யோகத்தின் வகைகள்
யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம் . இதில் தியானம் என்பது ஒரு படி. என பல வகைகள் இருந்தாலும் மேற் சொன்ன முறைகளில் அனைத்தையும் அடையலாம் .
மேலும் சக்கரங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் . This is for your reference only .
சக்கரங்கள்
கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7
- மூலாதாரம்,
- ஸ்வாதிஸ்டானம் ,
- மணிப்பூரகம் ,
- அனாகதம்,
- விசுத்தி ,
- ஆக்ஞை ,
- மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )
1 . குண்டலிமகா யோக தியானம் தொப்புள் கொடியையும் முதுகு தண்டையும் சிரசையும் வைத்து பெறுவது
2 . புருவ மத்தியை மையமாக கொண்டு ESP
3 . இதயக்கமலத்தில்
4 . புத்தர் தியானம்
5 . பஞ்சம் யோகம்
6 . சர்வாங்க யோகம்
முடிவுரை பலவித தியான சக்கரங்கள் இருந்தாலும் மேல சொன்ன செய்முறைப் படி செயதால் அனைத்தும் கிட்டும் .
தியானத்தால் ஏற்படும் நன்மைகள் !!!
1) அறிவுக் கூர்மை ஏற்படும்.
2) மன உறுதி உண்டாகும்.
3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.
4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.
5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.
6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.
7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.
8) முகம் பிரகாசமடையும்.
9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.
10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.
11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.
12) தேவையற்ற கோபம் போகும்.
13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.
14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.
15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.
ஆதலினால் தியானிப்பீர்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக